லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
ஆளே மாறிய நிவின் பாலி!
நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் குறைத்து ஆளே மாறிய தோற்றத்தில் உள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான நிவின் முக்கிய கதாபாத்திரங்களிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக, ’தட்டத்தின் மரையத்து’, ‘1983’, ‘நேரம்’ ஆகிய படங்கள் தொடர் வெற்றிபெற்றன.
அதன்பின், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் தென்னியந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்போது முதல் நிவின் பாலிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
இதையும் படிக்க: ஆர்வமூட்டும் பிரம்மாண்டம்... கேம் சேஞ்சர் டிரைலர்!
சில ஆண்டுகளாகவே நிவின் பாலி அதீத எடையுடன் காணப்பட்டார். அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படமாக அமைந்தன. இதனால், அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன் நிவின் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. ஆனால், விசாரணையில் நிவின் குற்றமற்றவர் எனத் தெரிந்தது.
இந்த நிலையில், இன்று இணையத்தில் நிவின் பாலியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், உடலைக் குறைத்து ஆளே மாறியிருக்கிறார். இதனால், அப்படத்தை அவருடைய ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.