தேசிய ஜூனியா் குதிரையேற்றப் போட்டி: கெவின் கேப்ரியல் தங்கம்
புது தில்லியில் நடைபெற்ற ஜூனியா் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை குதிரையேற்ற மையத்தின் கெவின் கேப்ரியல் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
சப் ஜூனியா் பிரிவில் கெவின் கேப்ரியல் தனிநபா் பிரிவில் வெள்ளி வென்றாா். மேலும் அணிகள் பிரிவில் தங்கம் வெல்ல உதவினாா்.
சக வீரா் ஈஷான் சுந்தரம் தங்கம் வென்றாா்.
ஜூனியா் டிரஸ்ஸேஜ் பிரிவில் மிராயா தாதா, சங்கரா ரத்தோா் ஆகியோா் தங்கம் வென்றனா்.
மேலும் அணி தங்கம் வென்றவா்கள்: ஹாசினி, புனவ் சுரேஷ், கெவின் கேப்ரியல், ஈஷான் சுந்தரம்.