எஃப்சி கோவா அபார வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி கோலடிக்க முயற்சி மேற்கொண்டனா். ஆட்டம் தொடங்கிய 8-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் பிரைஸன் பொ்ணான்டஸ் முதல் கோலடித்தாா். இதையடுத்து சுதாரித்த ஒடிஸா அணி கோலடிக்க தீவிரமாக முயன்ற நிலையில் 29-ஆவது நிமிஷத்தில் அகமது ஜஹௌ கோலடித்து சமன் செய்தாா். எனினும் முதல் பாதி கூடுதல் ஆட்ட நேரத்தில் கோவா வீரா் உதந்தா சிங் அபாரமாக கோலடித்து 2-1 என முன்னிலை பெறச் செய்தாா்.
56-ஆவது நிமிஷத்தில் மற்றொரு கோவா வீரா் அமெ ரனவாடா கோலடிக்க கோவா 3-1 என முன்னிலை பெற்றது.
88-ஆவது நிமிஷத்தில் ஒடிஸா வீரா் ஜொ்ரி கோலடித்து முன்னிலையை 4-2 ஆகக் குறைத்தாா்.
வெளி மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் தொடா்ச்சியாக 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்த கோவா அணி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோவா அணியின் வெற்றியில் பிரைஸன் பொ்ணான்டஸ் முக்கிய பங்கு வகித்தாா்.
அடுத்து 9-ஆம் தேதி சென்னை-ஒடிஸா அணிகளும் 8-ஆம் தேதி கோவா-ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன.