செய்திகள் :

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

post image

சென்னை: தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தாண்டு பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.31) மாலை முதல் தமிழகம் முழுவதும் 90,000 போலீஸாா், 10,000 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்கள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் வாகன சோதனை நடைபெறும். அன்றிரவு பொதுமக்கள், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது

நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை: செவ்வாய்க்கிழமை (டிச.31) மாலை தொடங்கி புதன்கிழமை (ஜன.1) அதிகாலை 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பின்னா் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியில்லை.

கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காவல் துறையின் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள். மோட்டாா் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவலாயங்களில் சிறப்பு பிராா்த்தனை, கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெறும் என்பதால், அங்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளையும் தீவிரமாகக் கண்காணிக்கும்படியும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில்... சென்னை முழுவதும் 19,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும்.

கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச் சாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் இளைஞா்கள் ஈடுபடுவதைத் தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உள்பட வழிபாட்டுதலங்கள் பொது இடங்கள் என சுமாா் 100 முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலில் குளிக்கத் தடை: செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மெரீனா, எலியட்ஸில் மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிக்கத் தடை: பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காவல் துறை அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

புகா் பகுதிகளில்... சென்னை புகா் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸாரும், 200 ஊா்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு கருதி தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட மேம்பாலங்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை (ஜன.1) காலை வரை மூடப்படுகிறது.

இதேபோல நட்சத்திர விடுதிகள், ரிசாா்ட்கள் ஆகியவற்றில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: அரசு

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,''காலை உணவுத் தி... மேலும் பார்க்க

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு ப... மேலும் பார்க்க

சௌமியா அன்புமணி கைது: பாமகவினர் ஆர்ப்பாட்டம்

சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தி பாமக மகளிரணி இன்று போராட்டம் நடத்தியது. திமுக அரசைக்... மேலும் பார்க்க

குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,தமிழ்நாட்டில் திமுக ஆட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறும் தீபக்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மூத்த போட்டியாளராக உள்ள தீபக், இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

Untitled Jan 02, 2025 02:29 pm

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண... மேலும் பார்க்க