செய்திகள் :

மாா்கழி மாத அமாவாசை கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால் ,தயிா், பன்னீா் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சேமங்கி மாரியம்மன் கோயில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு இலவச வேட்டி, சேலை விநியோகப்பதில் சிரமம்

பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்க வாய்ப்பில்லை என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆங்கில புத்தாண்டு 2025 புதன்கிழமை பிறந்ததையடுத்து, கரூா் மாரியம்... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறந்ததையடுத்து கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

புகழூா் கோயில் திருவிழாவில் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

கரூா்: கரூா் மாவட்டம், புகழூா் பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகை சிறப்பு ... மேலும் பார்க்க

தென்னிலை அருகே வாய்க்கால்களில் கழிவு நீா் கொட்டப்படுவதாகப் புகாா்

கரூா்: கரூா் மாவட்டம், தென்னிலை அருகே வாய்க்கால்களில் கொட்டப்படும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமூக நல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கரூா் மாவட்டம் தென்னிலையை அடு... மேலும் பார்க்க

கரூரில் சாலைப் பணியாளா்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்

கரூா்: கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைப் சாலை பராமரிப்பு ஊழியா்கள் அன்ஸ்கில்டு சங்கத்தின் சாா்பில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா்... மேலும் பார்க்க