தென்கொரியா விமான விபத்து: பலி 62-ஆக உயர்வு!
தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது.
"இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 62 பேர் பலியாகியுள்ளனர், பலியானவர்களில் 25 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள்." என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ”விமானம், பறவைகள் மீது மோதியதின் விளையாக, தரையிறங்கும் கருவியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு இருக்கலாம்” என்று கூறப்படுகிறது.