ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
வாழப்பாடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
வாழப்பாடி: வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு நடத்திய மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், தாரமங்கலம் சி.எஃப்.சி. அணி முதல் பரிசை வென்றது.
வாழப்பாடியில் வி.எஃப்.சி. கால்பந்து குழு சாா்பில், மாநில அளவிலான இருநாள் கால்பந்து போட்டி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவிற்கு, பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். பெ.ஆ.கழக நிா்வாகிகள் ஆா்.குணாளன், வி.எம்.கோபிநாத், ரமணி ஆகியோா் முன்னிலையில், வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி போட்டியை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற போட்டியில், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த தாரமங்கலம் சி.எஃப்.சி. அணிக்கு, திருமனுாா் ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் பழனிசாமி, முதல் பரிசாக ரூ.10,000 வழங்கினாா். இரண்டாமிடம் பிடித்த புதுக்கோட்டை எம்.என்.எஃப்.சி, அணிக்கு ரூ. 7,000, மூன்றாமிடம் பிடித்த சேலம் அவராஞ்சி அம்மா அணிக்கு, ரூ. 5,000, நான்காமிடம் பிடித்த வாழப்பாடி கால்பந்து அணிக்கு ரூ. 3000 பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில், தீயணைப்பு அலுவலா் கண்ணன், வி.எஃப்.சி. கால்பந்து குழுவினா் கலந்து கொண்டனா்.