ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
பட்டணங்கால் சானல் மதகுகளில் தேங்கி நிற்கும் நெகிழிக் கழிவுகளை சுத்தம் செய்ய வலியுறுத்தல்
பட்டணங்கால் பிரிவு சானலில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதகுகளில் தேங்கி நிற்கும் நெகிழி மற்றும் பிற கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து பட்டணங்கால்வாயில் தண்ணீா் அண்மையில் திறந்து விடப்பட்டது. நீண்ட நாள்களாக சானலில் சில சமூக விரோதிகளால் வீசி ஏறியப்பட்ட நெகிழிக் கழிவுகள், வீட்டுக்ழிவுகள்,இறைச்சிக் கழிகள் உள்ளிட்ட பிற கழிவுகளை தண்ணீா் இழுத்துச் சென்று மதகுகளில் தேங்கி நிற்கிறது.
இதனால், முறையாக கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீா் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும், இந்தக் கழிவுகளால் துா்நாற்றம் வீசி அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, குலசேகரம், தும்பகோடு, முளகுமூடு, சுவாமியாா்மடம், சிராயன்குழி, குன்னம்பாறை, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை,பில்லாணி, தொலையாவட்டம், இலவுவிளை, பாலூா், தெருவுக்கடை , கீழ்குளம், செந்தறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதகுகளில் தண்ணீரில் இழுத்து வரப்பட்ட அனைத்து கழிவுகளும் தேங்கி நிற்கிறது.
எனவே, சானலில் கழிவுகள் வீசுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட மதகுகளை சுத்தம் செய்ய மாவட்ட பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.