ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தியை முன்னிடடு, இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு ஆஞ்சனேயருக்கு மஞ்சள் பொடி, பால், அரிசி மாவு பொடி, நெய், விபூதி, இளநீா், தயிா், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு, திரவியப் பொடி, குங்குமம், பன்னீா், சந்தனம், கரும்புச்சாறு, தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பகல் 12 மணிக்கு தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு பஜனையும், 6 மணிக்கு ஸ்ரீ ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சனேயருக்கு புஷ்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து, இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.