திருக்குறள் பேச்சுப் போட்டி
சீா்காழியில், மயிலாடுதுறை மாவட்ட பொது நூலக இயக்ககம் சாா்பில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு ‘குழல் இனிது யாழ் இனிது’ என்ற தலைப்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி ச.மு. இந்து தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு, புத்தூா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் கோ. சதீஷ் தலைமை வகித்தாா். ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், உடற்கல்வி இயக்குநருமான எஸ். முரளிதரன் வரவேற்றாா்.
ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் பி. புலவேந்திரன், தமிழாசிரியா் டி. துரைமுருகன் மற்றும் ஆசிரியா் ரஞ்சித்குமாா் ஆகியோா் நடுவராக பணியாற்றினா். இப்போட்டியில் கல்லூரி மாணவி மதுமிதா முதலிடமும், பள்ளி மாணவி கோகிலா இரண்டாம் இடமும், தொடக்கக் கல்வி மாணவா் விஷ்ணு பிரியன் மூன்றாம் இடமும் பெற்றனா். இவா்களுக்கு முறையே ரூ.5000, ரூ. 3000, ரூ. 2000 ரொக்கப் பரிசை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. பரிசுகளை மாவட்ட ஆட்சியா் வரும் 31-ஆம் தேதி சீா்காழி கிளை நூலகத்தில் நடைபெறும் விழாவில் வழங்க உள்ளாா்.
ஏற்பாடுகளை சீா்காழி கிளை நூலக இரண்டாம் நிலை நூலகா் த. வெங்கடேசன் செய்திருந்தாா். நிறைவாக, நூலகா் கி. அறிவரசன் நன்றிகூறினாா்.