செய்திகள் :

What to watch on Theatre & OTT: திரு.மாணிக்கம், அலங்கு, ராஜாகிளி; இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

post image

திரு.மாணிக்கம் (தமிழ்)

திரு.மாணிக்கம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. இந்த டிஜிட்டல் காலத்தில் வெள்ளந்தியாக நேர்மையாக இருக்கும் ஒருவர் என்னவெல்லாம் பிரச்னைகளைச் சந்திக்கிறார். குடும்பமும், சமுதாயமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அலங்கு (தமிழ்)

அலங்கு

எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அலங்கு'. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பையும், அதனை மையமாக வைத்து வரும் பிரச்னையையும் பற்றி பேசும் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Smile Man (தமிழ்)

The Smile Man

ஷியாம் - பிரவீன் இயக்கத்தில் சரத்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் சந்திரா, இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Smile Man'. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராஜாகிளி (தமிழ்)

ராஜாகிளி

உமாபதி ராமய்யா இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இது. பிரபல தொழிலதிபராக இருக்கும் தம்பி ராமய்யா, பெண் ஆசையால் சரிந்து, வீழும் கதை இது. வாழ்க்கைத் தத்துவத்தை சுவாரஸ்யக் கதையுடன் சொல்லும் இத்திரைப்படம் நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மழையில் நனைகிறேன் (தமிழ்)

மழையில் நனைகிறேன்

சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால், ரெபா மோனிகா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மழையில் நனைகிறேன்'. காதல், ரொமாண்டிக் கதையான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Max (கன்னடம், தெலுங்கு, தமிழ்)

Max

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், வரலஷ்மி சரத்குமார், சமியுக்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Max'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Barroz (மலையாளம், தமிழ், தெலுங்கு)

Barroz

பரோஸ் பூதமாக மாற்றப்பட்டு 400 ஆண்டுகளாக பொக்கிஷங்களைப் பாதுகாக்க வைக்கப்படுகிறார். மீண்டும் அதற்குச் சொந்தமான  டி காமாவின் அடுத்த தலைமுறையினர் வந்து அந்த பொக்கிஷங்களைப் பெற்றுக் கொண்டார்களா, பரோஸுக்கு விமோசனம் கிடைத்ததா என்பதுதான் மோகன் லால் முதல்முறையாக இயக்குநராகக் களமிறங்கியிருக்கும் இந்த 3டி ஃபேண்டஸி திரைப்படத்தின் கதை. சாகச, பேண்டஸி திரைப்படமான இது கிறிஸ்துமஸ் அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Barroz Review: 'இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..' - இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா?

Srikakulam Sherlockholmes (தெலுங்கு)

Srikakulam Sherlockholmes

மோகன் இயக்கத்தில் சியா கெளதம், கிஷோர், ரவி தேஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Srikakulam Sherlockholmes'. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Baby John (இந்தி)

Baby John

காளீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baby John'. அட்லியின் 'தெறி' படத்தின் ரீமேக்கான இது நேற்று (டிச27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ்கள்

RRR (Behind and Beyond) - Netflix

Doctors (இந்தி) - Jio Cinema - Dec 27

Khoj - Parchaiyon Ke Uss Paar (இந்தி) - Zee5

What If...?: S3 (ஆங்கிலம்) - Disney + Hotstar

Squid Game: S2 (ஆங்கிலம்) - Netflix

தியேட்டர் டு ஓடிடி

Sorgavaasal (Tamil) - Netflix

White Rose (Tamil) - Aha

Thaanara (Malayalam) - Amazon Prime Video

Panchayat Jetty (Malayalam) - manorama MAX

Bhairathi Ranagal (Kannada) - Amazon Prime Video

சொர்க்கவாசல்

Rahasyam Idham Jagath (Telugu) - Etv WIN

Singham Again (Hindi) Prime

Bhool Bhulaiyaa 3 (Hindi) Netflix

Never Let Go (English) - Amazon Prime Video

The Roundup: Punishment (Korean) Amazon Prime Video

Sikandar: 10 வருடத்திற்குப் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான்; சந்தோஷ் நாராயணின் பாலிவுட் டெபுட்!

சல்மான் கானின் `சிக்கந்தர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது.சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினமே இத்திரைப்படத்தின் டீசர் வெளியாவதாக அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் இன்று... மேலும் பார்க்க

Adithya : `அந்த சம்பவம் நடந்து 3 வருஷத்துக்கு பின் இப்போ ரஹ்மான் சார் இசையில..!’ - ஆதித்யா ஷேரிங்ஸ்

பாடல்களை ரீ - கிரியேட் செய்வது எப்போதும் இருக்கும் ஒரு எவர்கிரீன் டிரண்ட்!அப்படி பழைய மாஸ்டர்பீஸ் பாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ரி- கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் ரஹ்மானின் `காதல... மேலும் பார்க்க

Vijay Antony: `கடைசி நேர மாற்றத்திற்காக மன்னிப்பு கோருகிறேன்' - விஜய் ஆண்டனி கான்சர்ட் தள்ளி வைப்பு

`விஜய் ஆண்டனி 3.0' கான்சர்ட் இன்று நடைபெறவிருந்தது.இதற்கு முன்பே வெவ்வேறு பகுதிகளில் கன்சர்ட் நடைபெற்றிருந்தது. விஜய் ஆண்டனியின் அந்த கான்சர்ட்டின் காணொளிகளும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவியது.... மேலும் பார்க்க

ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ்வை மாற்றிய தருணம்

தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரையில் உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக இன்றும் திகழ்பவர் `இசைப் புயல்' ஏ.ஆர். ரஹ்மான். இந்த நிலையில், சிறுவயதில் ஒரு இசைக்குழுவில் இருந்தபோது, மதுபோத... மேலும் பார்க்க

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை... மேலும் பார்க்க

Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' பற்றி ஆண்டனி தாசன்

அஜித் நடித்திருக்கும் `விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் முதல் சிங்கிளான `சவதீகா' பாடலை பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் பாடியிர... மேலும் பார்க்க