செய்திகள் :

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்

post image

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சத்யநாராயணன்

இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில்

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மயிலாடுதுறை, நாகை மாவட்ட செயலாளர், ராஜேஸ்வரன்

நமக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, `` சத்யநாராயணனின் கம்பீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். தலைவர் ரஜினி மீது இன்றைக்கும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் சத்யநாராயணன். தலைவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாகப் பேச மாட்டார். அவர் என்ன கேட்டாலும் ரஜினி செய்வதற்குத் தயார், ஆனால் சத்யநாராயணன் எதையும் கேட்க மாட்டார்.

சிறுநீரக பாதிப்பு தொடர்பாக கும்பகோணம் மருத்துவமனையில் சத்யநாராயணன் அனுமதிக்கட்டிருக்கும் தகவல் தெரிந்த அடுத்த நாளே தலைவர் ரஜினி, சத்யநாராயணனுக்கு போன் செய்து சென்னையில் சிகிச்சையைப் பார்த்துக் கொள்ளலாம்னு வரச்சொன்னார், அதற்கு அவர் கொஞ்சம் சரியாகட்டும் வருகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அப்போது, சத்யநாராயணனால் சரியாகப் பேச முடியவில்லை. உடனிருந்த பாபா மூலம் எதற்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க, எவ்வளவு செலவானாலும் பார்த்து கொள்கிறேன். அவர் குணமாகணும் அதான் முக்கியம். சிகிச்சைகான அனைத்து செலவுக்கான பில், மருத்துவமனையில் வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவற்றை அனுப்பி வையுங்கள் அந்தப் பணத்தை அனுப்பச் சொல்கிறேன் எனக்கூறியிருக்கிறார்.

சத்யநாராயணனுடன் ராஜேஸ்வரன்

ஆனால், சத்யநாராயணன் உடன் இருந்தவர்கள் பில்லை அனுப்பவில்லை. இந்த நிலையில் இதுவரை ஆன செலவு விபரங்கள் இன்று அனுப்பப்பட்டது. உடனே தலைவர் பணத்தை செலுத்தி விட்டார். ரஜினியும், சத்யநாராயணனும் நெருங்கிய நண்பர்கள். சத்யநாராயணனுக்கு ஒண்ணுனா ரஜினி தவிச்சுடுவார், அப்படி தான் இப்பவும் தவிச்சார். பொருளாதார நெருக்கடி சத்நாராயணனுக்கு இல்லை. ஆனாலும் சிகிச்சைகான அனைத்து செலவையும் தலைவர் ரஜினி செய்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் அளவு கடந்த அன்பு கொண்டவர்கள்" என்றார்.

ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ்வை மாற்றிய தருணம்

தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரையில் உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக இன்றும் திகழ்பவர் `இசைப் புயல்' ஏ.ஆர். ரஹ்மான். இந்த நிலையில், சிறுவயதில் ஒரு இசைக்குழுவில் இருந்தபோது, மதுபோத... மேலும் பார்க்க

What to watch on Theatre & OTT: திரு.மாணிக்கம், அலங்கு, ராஜாகிளி; இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

திரு.மாணிக்கம் (தமிழ்)திரு.மாணிக்கம்இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்பட... மேலும் பார்க்க

Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' பற்றி ஆண்டனி தாசன்

அஜித் நடித்திருக்கும் `விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் முதல் சிங்கிளான `சவதீகா' பாடலை பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் பாடியிர... மேலும் பார்க்க

The Smile Man Review: சீரியல் கில்லரின் அட்டகாசம்; திகில் கிளப்புகிறதா சரத்குமாரின் 150வது படம்?

கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்' எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந... மேலும் பார்க்க

அலங்கு விமர்சனம்: டெக்னிக்கலாக மிரட்டும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், எமோஷனலாகவும் நெகிழச் செய்கிறதா?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் நாயகன் தர்மன் (குணாநிதி). நியாயத்துக்காக நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகத் தான் படிக்கும் பாலிடெக்னிக... மேலும் பார்க்க

திரு.மாணிக்கம் விமர்சனம்: நேர்மையான அந்தக் கதாபாத்திரத்துக்கு சல்யூட்... ஆனால் படத்துக்கு?

எளிய மனிதனின் நேர்மை படும் பாட்டையும், அதைக் காப்பதற்கான அவனின் போராட்டத்தையும் பேசுகிறார் இந்த 'திரு.மாணிக்கம்'.கேரள மாநிலம் குமுளியில் லாட்டரி கடையோடு சிறிய புத்தகக் கடையும் நடத்திவரும் மாணிக்கம் (ச... மேலும் பார்க்க