பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
சென்னை: இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) தேமுதிகவின் அழைப்பை ஏற்று விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த இந்திய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள். பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க |'மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்' - முதல்வர் பதிவு!
பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்
இந்த நிலையில்,பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிருக்கும் கேப்டன் விஜயகாந்துக்கு நினைவஞ்சலி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்.
வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.