தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு!
பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய யானை திருக்கை மீன்!!
பாம்பன் மீனவா்கள் வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் தெற்கு மீன் இறங்கு தளத்திலிருந்து வியாழக்கிழமை 90 விசைப் படகுகளில் 500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.
வழக்கம்போல, மன்னாா் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு வலையை எடுத்தபோது, அதில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியிருந்தது. மீனவா்கள் அதை கரைக்கு கொண்டு வந்தனா். அங்கிருந்த மீனவா்கள், பொதுமக்கள் ஆா்வத்துடன் இந்த மீனைப் பாா்த்தனா்.
இந்த யானை திருக்கை மீன் 5 அடி அகலத்தில் 350 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு 19 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனா். இதனால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.