புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை!
19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பி.எஸ்.என்.எல்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (வி.ஆர்.எஸ்.) திட்டத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கவுள்ளது. இது ஒட்டுமொத்த பி.எஸ்.என்.எல். ஊழியர்களில் 35 சதவீதமாகும்.