செய்திகள் :

கழிவறைப் பேய் - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

அந்தி மாலை நேரம். சூரியன் மறைந்த தைரியத்தில் இருள் தலை காட்டத் தொடங்கியது.

காமாட்சியம்மாள் கொல்லைப் புறம் நோக்கிச் சென்றாள். அவளுக்கு, இயற்கை உபாதையை கழிக்கச் செல்லும் வழக்கமான நேரம் அது. கொல்லைப் புற வாசலில் இருந்து 30 அடி தூரத்தில், காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே, வலது புற ஓரத்தில் கழிவறை, குளியலறை இரண்டும் இருக்கும். காமாட்சியம்மாள், எவ்வளவு போராடியும்,

கழிவறைக் கதவு திறக்க மறுத்தது. பல முறை முயற்சித்து தோல்வியடைந்ததால் வீட்டிற்குத் திரும்பினாள் காமாட்சி.

1960 களின் தொடக்கத்தில் வீட்டிற்குள் கழிவறை, குளியலறை அமைப்பது சுகாதாரமற்ற செயலாகக் கருதப்பட்டது. அதுவும் மானாமதுரை போன்ற ஊரில், கொல்லைப் புறத்தில் இவை இருப்பதே சில வசதி படைத்தவர்கள் வீட்டில் தான். மற்றபடி ஆண், பெண் இருபாலருக்கும், வைகை ஆற்றங்கரை ஓரம்தான. மதில் சுவரோ கூரையோ இல்லாத கழிவறை என்பது எழுதப்படாத உரிமை.

சித்தரிப்புப் படம்

காமாட்சியம்மாள் வீடு, செட்டிய தெருவில் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்தால், வலது புறம் 100 அடி தூரத்தில், கீழே நேரே செல்லும் ரோடு வைகை ஆற்றுக்குச் செல்லும். வலது புறம் சற்று மேலே செல்லும் ரோடு, ரயில்வே லைனைத் தாண்டி கீழிறங்கி, அடர்ந்த கருவேல மரம் நிறைந்த ஆற்றின் கரையை அடையும். அந்த ரோடே, பல ஒத்தையடிப் பாதைகளாய் மாறி கருவேலங் காட்டுக்குள் மறைந்து விடும்.

வீட்டை விட்டு வெளியே வந்து இடது புறம் செல்லும் ரோடு, நேராக தேவகோட்டை மெயின் ரோட்டில் முட்டும்.

வீட்டின் பக்கவாட்டில் செல்லும் ரோடு, பின் புறம் சென்றால், உயரே ஒத்தையடிப் பாதையாய் ரயில்வே லைனை அடையவும், கீழே ரயில்வே லைனை ஒட்டிச் சென்றால், மானாமதுரை ஈஸ்ட் ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும்.

"அடியே சாந்தா, வாடி, ஆத்தங்கரை வரைக்கும் போய்ட்டு வருவோம்."

இளைய மகள் சரியென்றாள். "சந்திரா, வீட்டைப் பாத்துக்க, 7 1/2 மணிக்கெல்லாம் கருப்புக் காஞ்சி வந்துருவான். காபி சுட வைச்சுக் குடு. செத்த வந்துர்றேன்". மூத்த மகள் ஆமோதித்தாள். ஓட்டமும் நடையுமாக தாயும் மகளும் ஆற்றங் கரைக்குச் சென்றார்கள். வழக்கமாக காமாட்சியம்மாளுக்கு, வானில் கரு மேகங்கள் சூழ்ந்தாலோ, இடி முழக்கம் கேட்டாலோ, வயிற்றைக் கலக்கும். பயம் வந்தாலும் அப்படித் தான். கழிவறைக் கதவு ஏன் திறக்கவில்லை? உள்ளே பேய் இருக்குமோ? இந்த பயத்தில் காமாட்சியம்மாளின் வயிறு கலங்கிய சத்தம், சாந்தாவின் காதுகளிலேயே தெளிவாகக் கேட்டது.

வீட்டிற்குத் திரும்பிய போது காமாட்சியின் உடல் உபாதை குறைந்திருந்தது. ஆனால் மனக்கிலேசம் குறைய வில்லை. வீட்டிற்குத் திரும்பிய உடன், நேராகச் சென்று கொல்லைப் புறக் கதவைச் சாத்தி, 3 தாழ்ப்பாள் களையும் போட்டாள்.

கருப்புக் காஞ்சி காபி குடித்துக் கொண்டிருந்தான். சிவகங்கை RDM காலேஜில் PUC படிப்பவன். காலை, மாலை இரு வேளைகளிலும் ரயில் பயணம்.

சித்தரிப்புப் படம்

நான்கு நாட்களுக்கு முன் கருப்புக் காஞ்சிக்கு ஒரு கெட்ட கனவு. ரயில்வே லைனில் விளையாடிக் கொண்டிருந்த கருப்புக் காஞ்சியின் காதை, ஒரு முரட்டு மீசை வைத்த ஒரு கருப்பு ஆள், திருகி,

"இங்கெல்லாம் வரக் கூடாது, ஓடுறா.."

என்று கனவில் சொல்ல, வேர்வை சொட்ட எழுந்திருச்ச கருப்புக் காஞ்சிக்கு 102° ஜொரம். காமாட்சியம்மாள், கருப்புக் காஞ்சிக்கு மொட்டையடிப்பதாக, கருப்பண்ண சாமிக்கு, வேண்டிய பின் தான் காய்ச்சல் குறைந்தது. இன்று தான் காலேஜுக்குப் போய் வத்திருக்கிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன், கழிவறைப் பிரச்னை.

இது பேயின் வேலையா? கருப்பண்ண சாமியின் ஓட்டமா?

காமாட்சி பக்கத்து வீட்டிற்குச் சென்றாள். வாசலில் நின்று, "அடியே அன்னக்கிளி அம்மா, செத்த வாயேன்".

"என்னம்மா?"

"ஒங்க வீட்ல ராத்தியரியில ஏதும் வித்தியாசமா தெரியுதா?"

"ஒன்னும் இல்லையேம்மா!?!?"

"சத்தம் ஏதும் கேக்குதா?"

"இல்லையே! வழக்கமான சத்தந்தான்..மாடு சாணி போடுறது... மூத்திரம் பேயிற சத்தம். இதுதான் கேக்கும்."

கேள்விகளின் ரிஷி மூலம் சொல்லாமல், "சரி நான் வர்றேன். சும்மாதான் கேட்டேன்". அன்னக்கிளி வீட்டில் கழிவறை இல்லை. நிரந்தர ஆற்றங் கரை கழிப்பர்கள். பள்ளி முடிந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு வெள்ளைக் காஞ்சியும் (காமாட்சியின் 2வது மகன்) வீட்டிற்கு வந்து விட்டான்.

காமாட்சி, மனதில் தைரியத்தை வர வழைத்து, பிள்ளைகளிடம் கழிவறைப் பேய் பற்றிக் கூறினாள். அம்மா சொன்னால் வேத வாக்கு என்று நம்பும் மகள்கள் இருவரும் பயத்தில் உறைந்தனர்.

"ரயிலில் அடி பட்டு, பேயா அலையிறது, யார் மேலேயோ தொத்திக்கிட்டு வந்து நம்ம வீட்டுக்கு வந்துருக்குமோ?" இது காமாட்சி.

"ஆமா, அதுக்கு அவசரமா ஆயி வந்து நம்ம வீட்ல கக்கூஸைப் பாத்ததும் உள்ள குதிச்சிருச்சா?" இது கருப்புக் காஞ்சியின் கிண்டல்.

சித்தரிப்புப் படம்

"4 நாள் முன்னாடி கருப்பண்ண சாமி அடிச்சு வாயைப் பொளந்துக் கிட்டு கிடந்த.... இப்ப அம்மாவைக் கேலி பண்றியா?"

``எதுவா இருந்தாலும், வீட்டுக்குள்ள வரலைன்னு சந்தோஷப் படுங்கம்மா", இது வெள்ளைக் காஞ்சியின் ஆறுதல்.

" நல்ல வேளை, சந்தர் வீட்டில் இல்லை. பாண்டியன் மாமா கூட மத்தியானமே சிவகங்கை போய்ட்டான். அவன் இதைக் கேட்டா ரெம்ப பயந்திருப்பான்",

இது சந்திராவின் கண்டுபிடிப்பு.

இரவு கணவனிடம் மெதுவாகக் கூறினாள் காமாட்சி.

" புள்ளைங்களையும் பயமுறுத்தீட்டியா?. பேசாமத் தூங்கு. காலைல பேசிக்கலாம்".

மறுநாள் காலை, அனைவரும் ரோபோ போல எதைப்பற்றியும் யோசிக்காமல் தத்தம் வேலையைப் பார்த்து பள்ளி, காலேஜ் என்று சென்று விட்டனர். யாரும் கழிப்பறை செல்ல வில்லை.

10 மணிக்கு கணவர் அலுவலகத்திலிருந்து 2 வேலையாட்கள் வந்தனர்.

காமாட்சி, கழிப்பறைக் கதவு உள் பக்கம் மூடிக்கொண்டது என பட்டும் படாமல் கூறினாள். இருவரும் கழிப்பறை நோக்கிச் சென்றனர்.

காமாட்சி கொல்லைப் புற வாசலைத் தாண்டாமலே அவர்களின் நடவடிக்கைகளை கவனித்தாள். மேற்கூரை இல்லாத கழிப்பறை சுவற்றின் மேல் ஒருவர் ஏறினார். காமாட்சிக்கு என்ன நடக்குமோ என மயிர்க் கூச்செறிந்தது. அவர் உள்ளே குதித்தார். சிறிது நேரத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தனர்.

"கதவைத் தெறந்தாச்சும்மா".

"என்ன ஆச்ச?"

கதவுல ஒரு சணல் வெளிப் பக்கமா தொங்கிக்கிட்டு இருந்துச்சில்ல, அதை எடது பக்கம் சுண்டி இழுத்திருந்திங்கன்னா, கதவு தெறந்திருக்கும். அனேகமா, இது நம்ம சந்தரோட வேலையாத்தான் இருக்கும்".

காமாட்சிக்கு இப்போது புரிந்தது. கழிப்பறையை உள்பக்கம் தாழிட்டு, அதில் ஒரு சணலைக் கட்டி, அதை மேல் புறமாக தூக்கிப் போட்டு, வெளியில் இருந்தே திறக்கும் படி செய்திருக்கிறான்.

கழிப்பறையின் சுவர் ஏறிக் குதித்து வெளியே வந்திருக்கிறான். காலையில் பள்ளிக் கூடத்திற்கு களவடித்து விட்டு இந்த சேட்டையை அரங்கேற்றி விட்டு, மத்தியானம், பாண்டியன் மாமாவுடன் சிவகங்கை போய்விட்டான்.

மாலை 5 மணிக்கு பாண்டியன் மாமாவுடன் சந்தர் வீட்டுக்கு வந்தான்.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் அனைவரும், பாரபட்சமின்றி, சந்தருக்கு பிறந்த நாள் கொண்டாடினர். வாங்கிய பரிசுகளுடன் அழுது கொண்டே தூங்கி விட்டான். காலையில் அத்தனையையும் மறந்து, அடுத்த லீலைக்குத் தயாராகி விட்டான் சந்தர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

கடைசி மூச்சு; கேள்விக்கு விடை சொன்ன தருணம்... மரணத்தின் வாசம் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

2024 Puducherry Rewind : எடப்பாடி முன்னே வாக்குவாதம், ஆளுநர்கள் மாற்றம், பெஞ்சல் பாதிப்பு... | Album

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் போட்டியில் முதல் நான்கு இடம் பெற்ற திருநங்கைகள்புதுச்சேரி அரசு அனுமதியோடு தேசிய அளவிலான சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்றனப... மேலும் பார்க்க

கைத்தொழில்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நவீன தாண்டவம்... `காலப்பயணம் 2100' - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

புத்தக நட்பு! - குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க