செய்திகள் :

கடைசி மூச்சு; கேள்விக்கு விடை சொன்ன தருணம்... மரணத்தின் வாசம் - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.

சிறுவயதிலிருந்தே அந்த ஆர்வக்கோளாறு இருந்தது குமரேசனுக்கு. அதாவது, கண்ணில் காணும் எந்த ஒரு அனுபவமாக இருந்தாலும், தானும் அதை நேரடியாக அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பது.

புரியும்படி ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சிறு வயதில், வானத்தில் பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியந்த அவனின் ஆழ் மனதில் பதிந்திருந்த அந்த பறக்கும் ஆர்வம், பின்னாளில், அலுவலகத்தில் சம்பள அட்வான்ஸ் போட்டு, பணம் கடன் பெற்று, சென்னையிலிருந்து டெல்லி வரை ஆகாய விமானத்தில் பயணம் செய்து, பறக்கும் சுகத்தை அனுபவித்த பிறகே தீர்ந்தது.

இதுபோலவே தண்ணீரில் நீந்துவது, பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது என்று தொடர்ந்து, இறுதியாக அவனின் ஊரில் நடந்த‌ விழாவில் காலில் சலங்கை கட்டி, சுற்றி வந்து பாட்டுப்பாடி பறை அடித்துப் பழகுவது வரை வந்து நின்றது.

சித்தரிப்புப் படம்

'என்னடா சொல்றே? உனக்கு ஏதாவது பைத்தியம் பிடுச்சுப் போச்சா? இதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்... நீ முதலில், கொஞ்ச நாள்களாக தேடித் தேடி புத்தகங்கள் படிக்கிறாயே... அதை நிறுத்து... அந்தப் புத்தகங்கள்தான் உன்னைக் குழப்பி விட்டிருக்கின்றன..' என்றான் லோகநாதன்.

குமரேசனின் நெருங்கிய நண்பன் என்பதோடு சிறு வயதில் இருந்து ஒன்றாய் வளர்ந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் உரிமை அதிகம் கொண்டவர்கள்.

'இல்லடா லோகு... நானும் மரணத்தைப் பற்றி, மனிதர்களின் வாழ்வின் இறுதி நாள்கள் பற்றி என்னென்ன புத்தகங்கள் வெளி வந்துள்ளனவோ, அத்தனையையும் வாங்கிப் படித்துப் பார்த்து விட்டேன்.

மனிதனின் இறுதி நிமிடங்களில் அவனின்  வலிகள்,  அன்பான உறவுகள், சம்பாதித்த சொத்துகள், புகழ் அனைத்தையும் விட்டு விட்டு, இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரியும்போது அவனின் உணர்வுகள் எப்படி இருக்கும்? எண்ண ஓட்டங்கள் யாரைப் பற்றியதாக இருக்கும்? அல்லது எதைப் பற்றியதாக இருக்கும்? என்பதையெல்லாம் அவரவர்கள் தங்களின் கற்பனையில் உதித்ததை எழுத்தில் வடித்திருக்கிறார்கள்.

ஆனால், அவைகள் எதுவும் என்னைத் திருப்திப் படுத்துவதாக  இல்லை. ஏனென்றால், அந்த உணர்வுகளை அவர்கள் எழுத்தில் வடிக்கும்போது அவர்கள் மரணத்தின் ருசியை அனுபவித்திருக்கவில்லை.  பின் எப்படி அது உண்மையாக இருக்க முடியும்?' என்று தர்க்கம் செய்தான் குமரேசன்.

சித்தரிப்புப் படம்

'மரணத்தைப் பார்த்த பிறகுதான் அதைப்பற்றி எழுதவேண்டும் என்பது இயற்கைக்கு ஒவ்வாத செயல். அவர்கள் அனுபவத்திலிருந்தும், படித்த புத்தகங்களின் துணையோடும்தான் அதை எழுத்தால் வடிக்க முடியும். இத்தனை படித்த நீ, முட்டாள்தனமாக மரணத்தை அனுபவித்துத்தான் எழுதவேண்டும் என்று நினைப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...' என்று விவாதித்தான் லோகநாதன். 

'நீ நினைப்பதைப் போல, திடீரென்று தோன்றிய ஆர்வமில்லை இது...நானும் மரணங்களோடு போராடிய பல‌ மனிதர்களை அருகில் இருந்து கண்டுள்ளேன். ஆனாலும் என் கேள்விக்கான விடை இதுவரை கிடைக்காததால்தான் இந்த முடிவு..' என்றான் குமரேசன்.

குமரேசனை உலுக்கிய முதல் மரணம், அவனோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவனின் உற்ற நண்பன் நாராயணனுடையது.

திங்கள்கிழமை கல்லூரி பிரேயர் ஹாலில் பிரின்ஸ்பால் அறிவித்த போதுதான் குமரேசனுக்கு நாராயணனின் மரணம் தெரிய வந்தது. அந்த அறிவிப்பின்போது, அவன் வகுப்புத்தோழர்கள் அனைவரும் வாடிப்போன‌ குமரேசனின் முகத்தை இரக்கத்தோடு திரும்பிப் பார்த்தார்கள்.

சித்தரிப்புப் படம்

இணைபிரியாமல் இருக்கும் அவர்களின் நட்பை அறிந்த அவர்களுக்கு, இந்த இழப்பை குமரேசன் எப்படித் தாங்கப் போகிறான் என்பதே அவர்களுக்குள் எழுந்த கேள்வி. கல்லூரி வகுப்பிலிருந்து விடுபட்டு, குமரேசன் நாராயணின் வீட்டை அடைந்தபோது, அந்த வீட்டு மனிதர்கள் அவனைச் சூழ்ந்து கதறிய கதறல் குமரேசனை நிலைகுலைய வைத்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை காவிரியாற்றில் குளிக்கப் போன அவன் சுழலில் சிக்கி, பிணமாக வீடு திரும்பி, அன்று மாலையே சாம்பலானதை அவன் பாட்டி பாட்டாகப் பாடி கதறினார். மிகுந்த ஆச்சாரம் நிறைந்த அந்தக் குடும்பம், முதன் முதலில் நாராயணனுடம் குமரேசன் சென்றபோது, அவ‌னை தங்களுடன் சமமாக‌ உட்கார வைத்து உணவு படைத்தது அவன் மனக்கண்ணில் வந்து போனது.

சுழலில் சிக்கி, மூச்சுக்காகத் திணறியபோது என்ன நினைத்திருப்பான் நாராயணன்? அம்மாவையா? அப்பாவையா? அல்லது அவனை வளர்த்தியதில் பெரும் பங்கு வகித்த அவன் பாட்டியையா? அல்லது அவன் கல்லூரி நண்பர்களையா? விடை தெரியாத கேள்வியாக குமரேசனின் மனதைக் குடைந்தெடுத்தது அந்த வினாக்கள்.

பதட்டமான குரலில் போனில் பேசினான் சண்முகம், 'டேய் லோகநாதா, நம்ம குமரேசன் அதிகமாகத் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு விட்டு, ஜி.ஹெச்.சில் அட்மிட் ஆகியிருக்காண்டா... உயிருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாராம். நினைவு வந்தவுடன் முதலில் உன்னைக் கேட்டிருக்கிறான். உடனே போய்ப் பாருடா..' என்றான்.

ஜி.ஹெச்சுக்கே உண்டான மருந்து நெடியுடனும், வெள்ளையுடை நர்சுகளுடனும் சுறுசுறுப்பாய் இருந்தது அந்த இடம். படுக்கையில் களைப்புடன் சோர்ந்து படுத்திருந்தான் குமரேசன். லோகநாதனைக் கண்டவுடன் மெலிந்த குரலில், ' வாடா...' என்றான்.

சித்தரிப்புப் படம்

'அத்தனை சொல்லியும் கேட்காமல் விஷப்பரீட்சையில் இறங்கி விட்டாயேடா.. என்னடா ஆச்சு?' என்றான் லோகநாதன்.

'நாளாக நாளாக, மரணம் பற்றிய கேள்விக்கணைகள் என்னைத் துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டதடா. உனக்குத்தான் தெரியுமே, எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்கு விடை கண்டுபிடிக்காமல் நான் ஓயமாட்டேன் என்று. கடைசியாக ஒரு முடிவெடுத்து என்னை நானே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள முடிவு செய்துதான் இப்படிச் செய்தேன்..' என்றான்.

'அடப்பாவி...சரி... உன் சோதனையின் முடிவுதான் என்ன? கண்டுபிடித்தாயா?..' ஆவலுடன் கேட்டான் லோகநாதன்.

'என் நினைவு மங்கிக் கொண்டிருக்கும்போது, பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு அப்பாவைக் கூப்பிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டதைச் சொல்லி விட்டேன்...என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலம் மட்டுமே எனக்கு அந்தக் கணத்தில் மேலோங்கி இருந்தது. எனது கேள்விக்கு கிடைத்த பதில் என்னவென்றால், ஒரு மனிதன் தன் இறுதி மூச்சின்போது மற்றவர்களைப் பற்றி நினைக்காமல் தன் உயிர் போய்விடும் என்ற சுயநலப் பதற்றத்தில்தான் இருப்பான் என்பதுதான் அது. இந்தப் பதில் கிடைப்பதற்கு நான் கொஞ்சம் அதிக விலை கொடுத்துவிட்டேன்டா..' என்றான் குமரேசன் அப்பாவியாக.

(முற்றும்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கழிவறைப் பேய் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

2024 Puducherry Rewind : எடப்பாடி முன்னே வாக்குவாதம், ஆளுநர்கள் மாற்றம், பெஞ்சல் பாதிப்பு... | Album

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் பகுதியில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் போட்டியில் முதல் நான்கு இடம் பெற்ற திருநங்கைகள்புதுச்சேரி அரசு அனுமதியோடு தேசிய அளவிலான சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்றனப... மேலும் பார்க்க

கைத்தொழில்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நவீன தாண்டவம்... `காலப்பயணம் 2100' - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

புத்தக நட்பு! - குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க