Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் முக்கிய அடையாளமான உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
புத்தாண்டை வரவேற்கும்விதாக பலரும் குடும்பத்தினருடன் சென்று தாஜ்மஹாலை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
மக்கள் கூட்டம் கூடுவதால் ஏற்கெனவே அங்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.