செய்திகள் :

மிட்செல் ஸ்டார்க் காயத்தால் அவதி: ஆஸி.க்கு பின்னடைவா?

post image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலா எலும்பு காயத்தால் அவதியடைந்து வருவதாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இதனால், வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சிட்னியில் நடைபெறும் 5-வது மற்றும் கடைசி போட்டியில் ஸ்டார்க் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

34 வயதான மிட்செல் ஸ்டார்க் பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும், அவர் பிசியோதெரபிஸ்ட்டின் உதவியால் அவரால் நன்கு பந்துவீச முடிந்தது.

ஸ்டார்க்கின் காயம் குறித்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “அவர் நலமுடன் இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டுவிடுவார். நான் ஸ்டார்க்குடன் நீண்டகாலமாக விளையாடி வருகிறேன்.

உலகில் உள்ள விளையாடுவதற்கு மிகவும் கடினமான வீரர்களில் ஸ்டார்க்கும் ஒருவர். அவர் விலா எலும்பு காயத்தால் அவதியடைந்தாலும்கூட அவர் விளையாடத் தயாராக இருப்பார்” எனக் கூறினார்.

2014-2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பார்டர் - கவாஸ்கர் கோப்பை வெல்லுவதற்கு, ஆஸ்திரேலிய அணி 5-வது போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டியது கட்டாயம். இருப்பினும், இந்திய அணி கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றால், 5-வது முறையாக கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளும்.

ஒருவேளை மிட்செல் ஸ்டார்க்கு ஓய்வு அளிக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக ஜே ரிச்சர்ட்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜே ரிச்சர்ட்சன் கூறுகையில், “விளையாடுவது பற்றி நான் அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றார்.

அவர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2-வது டெஸ்ட்: இருவர் சதம் விளாசல்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது... மேலும் பார்க்க

பந்தைப் பிடிக்க முயன்று ஆஸி. வீரர்கள் நேருக்கு நேர் மோதல்! மருத்துவமனையில் அனுமதி

பந்தைப் பிடிக்க முயன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காயமடைந்த இரு ஆஸ்திரேலிய வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று(ஜன.3) நடந்த சிட்னி தண்டர் மற்ற... மேலும் பார்க்க

விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: இருவர் அரைசதம்; ஜிம்பாப்வே 86 ரன்கள் முன்னிலை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தி... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வருகிறதா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் கடினமான காலக் கட்டத்தில் உள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில்... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் காயம்: பாதியிலேயே வெளியேறிய பாக்.வீரர்!

ஃபீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் பாதியிலேயே வெளியேறினார்.தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க