Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
பாஜக தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? மோகன் பகவத்துக்கு கேஜரிவால் கேள்வி!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் பட்டியலில் பாஜக முறைகேடு செய்வதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மேலும், தில்லியின் பல்வேறு தொகுதிகளில் பாஜகவினர் மக்களுக்கு பணம் அளிப்பதாகவும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க : அயோத்தி போன்ற பிரச்னைகளை வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கேஜரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை பாஜக ஆதரிக்கிறதா? மக்களுக்கு வாக்குக்காக வெளிப்படையாக பாஜக தலைவர்கள் பணப் பட்டுவாடா செய்வதற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தலித் சமூகத்தின் வாக்குகள் குறைந்துள்ளது ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறதா?, பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கவில்லையா? என்று கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
சமீபத்தில் மசூதிகளுக்கு எதிராக பாஜக தலைவர்களின் செயல்பாடுகளை மோகன் பகவத் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.