செய்திகள் :

மூன்று வகை வங்கிக் கணக்குகள் இன்றுமுதல் மூடல்!

post image

செயல்பாட்டில் இல்லாத மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நீண்ட நாள்கள் பயன்படுத்தாத கணக்குகளை மூன்று வகைகளாக பிரித்து, அவற்றை வங்கி நிர்வாகம் மூடவுள்ளன.

பயன்பாட்டில் இல்லாத கணக்குகள்

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது.

இந்த கணக்குகளை குறிவைத்து சைபர் மோசடி நடத்தப்படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

செயலற்ற கணக்குகள்

12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது.

இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!

இருப்புத் தொகை இல்லாத கணக்குகள்

நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ’ஜீரோ பேலன்ஸ் கணக்கு’களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய கணக்குகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

12 மாதங்களாக செயலற்ற முறையில் உங்கள் கணக்கு இருந்தால், உடனடியாக ஒரு பரிவர்த்தனை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், வங்கிக் கிளையை நேரடியாக நாடி, கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும், உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு: நகா் முழுவதும் போராட்டம் - பதற்றம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து பீதம்பூருக்கு எடுத்துவரப்பட்ட நச்சுக் கழிவுகள், அங்கு பாதுகாப்பான முறையில் எரிக்கப்படவுள்ளன. அதேநேரம், தங்களது பகுதியில் க... மேலும் பார்க்க

ஒடிஸா, மணிப்பூா் ஆளுநா்கள் பதவியேற்பு

ஒடிஸா மற்றும் மணிப்பூரின் புதிய ஆளுநா்களாக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் அஜய் குமாா் பல்லா முறையே வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்ல... மேலும் பார்க்க

தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் ‘டிராய்’ மூத்த அதிகாரி கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) மூத்த அதிகாரி ஒருவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ஹிமாசல பிரதேச மாநிலம், சிா... மேலும் பார்க்க

சநாதனத்தின் அா்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கா்

காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தா்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘சநாதன தா்மம்’, ‘ஹிந்து’ என்பதன் உண்மையான அா்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மக்கள... மேலும் பார்க்க

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்... மேலும் பார்க்க