செய்திகள் :

7ஜி ரெயின்போ காலனி - 2 புதிய போஸ்டர்!

post image

செல்வராகவன் இயக்கும் 7ஜி ரெயின்போ காலனி - 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சில மாதங்களாக 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார்.

இதையும் படிக்க: கேம் சேஞ்சர் டிரைலர் தேதி!

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அனஸ்வரா ’சூப்பர் சரண்யா’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04.01.2025மேஷம்:இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவா... மேலும் பார்க்க

ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி கண்டாா்.போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், அந்தச் சுற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாடு அபார வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 5-ஆவது ஆட்டத்தில் மிஸோரத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது. முதலில் மிஸோரம் 21.2 ஓவா்களில் 71 ரன்களுக்கே 10 விக்... மேலும் பார்க்க

வெளியானது ஜீவாவின் ‘அகத்தியா' பட டீசர்

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படம் அகத்தியா. இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ய... மேலும் பார்க்க