செய்திகள் :

Nitish Kumar Reddy: ``பாண்டியாவை விட நிதிஷ் சிறந்தவர்" - அணியில் எதற்கென்று கேட்ட கவாஸ்கர் புகழாரம்!

post image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்திருக்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 1 - 1 என ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் சமனில் இருந்த நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இந்தியா தோற்றது. இப்போது, 2 - 1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. மேலும், சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்டை டிரா அல்லது வென்று 2014-15க்குப் பிறகு மீண்டும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா மும்முரமாக இருக்கிறது.

இந்தியா (BGT 2024-25)

மறுபக்கம், சிட்னி டெஸ்டை வென்று தொடரை சமன் செய்வதன் மூலம் கோப்பையைத் தக்கவைக்கவும், விமர்சனங்களைத் தவிர்க்கவும் இந்தியா போராடி வருகிறது. ஆனால், இந்தத் தொடரில் இந்திய அணி ஆடும் விதத்தைப் பார்க்கையில், அது சற்று கடினம் என்று தெரிகிறது. இந்திய அணியின் நிலைக்குக் காரணம், இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே. சிறப்பாக ஆடுபவர்களில் ஒருவர் சீனியர் வீரர் பும்ரா. 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

இன்னொருவர், அறிமுக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி. மெல்போர்ன் டெஸ்டில் ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இந்தியா போராடிக் கொண்டிருந்த வேளையில் 114 ரன்கள் அடித்தது உள்பட, மொத்தமாக இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 294 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த 7 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் டாப் ஸ்கோரர் இவர்தான். மேலும், இந்தத் தொடரில் இதுவரையில் அதிக சிக்ஸ் (8 சிக்ஸ்) அடித்தவரும் இவரே. இவற்றோடு 3 விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தியிருக்கிறார்.

நிதிஷ் குமார் ரெட்டி

அணியில், ரோஹித், கோலி போன்ற சீனியர் வீரர்கள் சொதப்பிவரும் நிலையில், ஒரு இளம் ஆல்ரவுண்டராக தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே பேட்டிங்கில் அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துவருகிறார். பலரும் நிதிஷ் குமார் ரெட்டியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், இந்தத் தொடரின் முதல் போட்டியில் அஷ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களை பென்ச்சில் அமரவைத்து நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் எடுத்தபோது, சீனியர்களை உட்காரவைத்துவிட்டு அனுபவமில்லாதவரை எடுப்பதா என கவாஸ்கர் உள்பட பலரும் கேள்வியெழுப்பினர்.

அந்த கேள்விகளுக்கெல்லாம், தனது ஆட்டத்தால் நிதிஷ் குமார் ரெட்டி பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், முதல் டெஸ்டில் நிதிஸ் குமார் ரெட்டியை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பிய கவாஸ்கர், தற்போது அவரை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சுனில் கவாஸ்கர்

ஸ்போர்ட்ஸ்டார் (Sportstar) இதழில் ஒரு கட்டுரையில், ``டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இல்லாததிலிருந்து அவரது இடத்துக்கு ஒரு ஆல்ரவுண்டரை இந்தியா தேடிவருகிறது. அதில், நிதிஷ் குமார் ரெட்டி, பந்துவீச்சில் ஓரளவுக்கு கைகொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக பாண்டியாவை சிறந்தவர். இதற்கான கிரெடிட் அஜித் அகார்கார் மற்றும் சக தேர்வாளர்களுக்கும். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டிலேயே, சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடக்கூடிய வீரர் அவர் என்று தெளிவாகியது. அடுத்தடுத்த போட்டிகளில் அது மேலும் வலுவடைந்தது." என்று கவாஸ்கர் பாராட்டியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018-ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

AUSvIND: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டர்கள்; ஃபயர் மோடில் பும்ரா - Day 1 Full Review

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியான சிட்னி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னியில் டாஸ் போடப்படுவதற்கு முன்பே இந்த டெஸ்ட்டின் மீது அதீத எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள ஆரம... மேலும் பார்க்க

BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்பு முடிவுக்கு வரும்?

சிட்னி மைதானத்தில் நாளை தொடங்கும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி, தொடரை கைப்பற்றப்போவது யார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா, இந்தியாவின் 46 வருட காத்திர... மேலும் பார்க்க

Rohit: ``இதுவே சரியான நேரம்... நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" - ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 - 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்... மேலும் பார்க்க

Rohit - Bumrah: BGT கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் விலகல்; மீண்டும் கேப்டனான பும்ரா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்று முன்னிலையில் இருக்கிறது.இந்தத் தொடரை பும்ரா தலைமையில் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, ரோஹித்தின் வருகைக்குப் பின்ன... மேலும் பார்க்க

Vinoth Kambli: உடல் நலப்பாதிப்பு; கடுமையான நிதி நெருக்கடி; ஐபோன் பறிமுதல் - காம்ளியின் பரிதாப நிலை

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.வினோத் காம்ப்ளி - இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான பெயர். கழுத்தில் தங்க செயின், பிரேஸ... மேலும் பார்க்க

Gautham Gambhir: ``அணியிலிருந்து நீக்கப்படுகிறாரா ரோஹித்?" - கம்பீர் சூசகம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்கவிருக்கிறது. 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் நிலையில் சிட்னி டெஸ்ட்டை இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.... மேலும் பார்க்க