15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
Vinoth Kambli: உடல் நலப்பாதிப்பு; கடுமையான நிதி நெருக்கடி; ஐபோன் பறிமுதல் - காம்ளியின் பரிதாப நிலை
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வினோத் காம்ப்ளி - இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான பெயர். கழுத்தில் தங்க செயின், பிரேஸ்லெட், காதில் கம்மல் என அவரின் ஸ்டைலும், ஆட்ட அணுகுமுறையும் கரீபிய வீரர்கள் போன்று இருக்கும். 1988-ம் ஆண்டு மும்பையின் ஸ்கூல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரோடு இணைந்து 664 ரன்கள் அடித்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் மூலம் உலகுக்கு அறிமுகமான வினோத் காம்ப்ளி, சச்சினுக்கு மிக நெருங்கிய நண்பரும் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்ற வினோத் காம்ப்ளி தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 21 ஆம் தேதி உடல் நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில் வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினோத் காம்ளி தற்போது மாத ஓய்வூதியமாக BCCI-யிடம் இருந்து 30,000 ரூபாய் பெற்று வருகிறார். வீடு பழுதுபார்ப்புக்கு 15,000 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால் கடைக்காரர் வினோத் காம்பிளியின் ஐபோனை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் அவர் தனது வீட்டையே இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாக பலரும் வினோத் காம்ப்ளிக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.