Rohit - Bumrah: BGT கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் விலகல்; மீண்டும் கேப்டனான பும்ரா?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்று முன்னிலையில் இருக்கிறது.
இந்தத் தொடரை பும்ரா தலைமையில் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, ரோஹித்தின் வருகைக்குப் பின்னர் தோல்வி, டிரா, தோல்வி என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியிருக்கிறது.
மேலும், இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டியில் வெறும் 6.2 சராசரியில் 31 ரன்களை மட்டுமே அடித்திருக்கும் ரோஹித் மீது, `ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்காவது வழிவிடுங்கள்' என்று கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் பிளெயிங் லெவெனில் ரோஹித் இடம் பெறமாட்டார் என்று பேச்சுகள் அடிபட்டது.
இந்த நிலையில், மோசமான ஃபார்ம் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய பும்ரா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...