செய்திகள் :

Rohit: ``இதுவே சரியான நேரம்... நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" - ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி

post image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 - 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்வி என மோசமாக ஆடியிருக்கிறது. இதனால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.

ரோஹித் - கோலி

முக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்தத் தொடர் மட்டுமல்லாது கடைசியாக சொந்த மண்ணில் வங்கதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) அணிகளுக்கெதிரான தொடர்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. கோலி தனது கடைசி 9 டெஸ்ட் மேட்சுகளில் 17 இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட், ஒரு அரைசதம், ஒரு சதம் என 359 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அதேபோல், ரோஹித் தனது கடைசி 8 டெஸ்ட் மேட்சுகளில், 15 இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட், 10 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட், ஒரேயொரு அரைசதம் என 164 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தைத் தேடிச்சென்று அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டாவது, ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் எங்கு இறங்கினாலும் தடுமாறுவது என கோலியும், ரோஹித்தும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவருகின்றனர். `தவறுகளைத் திருத்திக்கொண்டு சரியாக முடியவில்லையென்றால் ஓய்வுபெறுங்கள். காத்திருக்கும் இளம் வீரர்களுக்காவது வாய்ப்பு கிடைக்கட்டும்.' எனப் பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், ரோஹித் ஓய்வுபெற இதுவே சரியான நேரம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி

The ICC Review நிகழ்ச்சியில் ரோஹித் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ``நான் ரோஹித்துக்கு அருகில் இருந்தால் நன்றாக அடித்து விளையாடச் சொல்வேன். இப்போது அவர் விளையாடுவது சிறப்பானதாக இல்லை. அவர் தனது கரியர் குறித்து முடிவெடுப்பார். ஒருவேளை, அவர் ஓய்வுபெற்றாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஏனெனில் அவருக்கும் வயதாகிறது.

2024-ல் 40 ஆவரேஜ் வைத்திருக்கும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள், பென்ச்சில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். அதனால்தான் சொல்கிறேன், ரோஹித் ஓய்வுபெற்றாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஆனாலும், இறுதியில் அவர் எடுப்பதுதான் முடிவு.

ரோஹித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால், அது தனி கதை. இல்லையெனில், அவர் மதிப்புடன் வெளியேற இதுவே சரியான நேரமாக இருக்கும். பந்தை எதிர்கொள்வதில் அவர் சற்று ஸ்லோவாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். தன்னுடைய இயல்பான ஆட்டத்தை அவர் ஆட வேண்டும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். ஒரு டெஸ்டில் தோற்றதால், தொடரை இழந்ததாக அர்த்தமில்லை." என்று கூறினார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Virat Kohli : `இது அரசனுக்கு அழகில்லை' - 8 முறையும் ஒரே பாணியில் அவுட்டான கோலி!

சிட்னி டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எட்டியிருக்கிறது. மீண்டும் விராட் கோலி சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்களில் இந்த இன்னி... மேலும் பார்க்க

Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் செயல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ... மேலும் பார்க்க

Rishabh Pant : `நம்மள காப்பாத்த நாமதான் சண்ட செய்யணும்!' - ஆஸி வீரர்களை மிரள வைத்த பண்ட்

'Stupid...Stupid...Stupid...' மெல்பர்ன் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் தாறுமாறாக ஷாட் ஆடி அவுட் ஆன போது வர்ணனையில் இருந்த கவாஸ்கர் இப்படித்தான் கடுகடுத்திருந்தார். இன்றைக்கு அதே ரிஷப் பண்ட் அதே 'Stupid' வகை ஆ... மேலும் பார்க்க

Rohit Sharma : ``விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" - ரோஹித் சொன்ன விளக்கம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பத... மேலும் பார்க்க

Bumrah: `திடீர் காயம்; மைதானத்திலிருந்து வெளியேறிய பும்ரா; கேப்டனாக கோலி'-சிட்னியில் என்ன நடக்கிறது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் சுருட்டியிருக்... மேலும் பார்க்க

AUSvIND: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டர்கள்; ஃபயர் மோடில் பும்ரா - Day 1 Full Review

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியான சிட்னி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னியில் டாஸ் போடப்படுவதற்கு முன்பே இந்த டெஸ்ட்டின் மீது அதீத எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள ஆரம... மேலும் பார்க்க