கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே ப...
இந்தாண்டில் அணிகள் இணையும்: சசிகலா
இந்த ஆண்டில் தமிழக அரசியலில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும் என்று அமமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுடன் பேசிய சசிகலா,
'2026-ல் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும். கண்டிப்பாக அணிகள் இணையும்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டபோது மாநில மகளிர் ஆணையம் ஏன் அங்கு செல்லவில்லை?
முதல் தகவல் அறிக்கை வெளியானதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' என்று தெரிவித்தார்.