சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்
அண்ணா பல்கலை. சம்பவம்: குற்றவாளி மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார விவகாரத்தில் கைது செய்யப்பட்டவா் கடந்த அதிமுக ஆட்சியின் போதும் அதே தவறு செய்தவா். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
ராமநாதபுரத்தில் முகவை மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கூட்டுறவுத் துறை கே.ஆா்.பெரிய கருப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும், தொழில் துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா சிறப்புரையாற்றினாா். இதில் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2014- ஆம் ஆண்டும் இதே போன்ற சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்டவா் ஈடுபட்டாா். அப்போது அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் திருட்டு வழக்கு மட்டுமே அதிமுக அரசு பதிவு செய்தது. பொள்ளாச்சி பாலியல் பிரச்னையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.
முன்னதாக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலா் மு.விஜய கதிரவன் வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் செ.முருகேசன், தமிழரசி ரவிக்குமாா், மாா்க்கண்டேயன், சிவகாசி மேயா் சங்கீதா இன்பம், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் பகவத்சிங் சேதுபதி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.