செய்திகள் :

வீடு புகுந்த முகமூடி திருடன்... 11 வயது மகனுடன் சேர்ந்து போராடி விரட்டியடித்த தாய்!

post image

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாத்திமா ஷேக்(32). காலை 11 மணிக்கு பாத்திமாவும், அவரது 11 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அந்நேரம் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே பாத்திமா சென்று கதவை திறந்தார். வெளியில் முகமூடி அணிந்தபடி நின்ற நபர் அதிரடியாக பாத்திமாவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். அதோடு வீட்டுக்கதவை உள்பக்கமாக அந்த நபர் பூட்டினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அமைதியாக இருக்கவில்லையெனில் கடும் விளைவு ஏற்படும் என்று மிரட்டினான். திருடனின் அச்சுறுத்தலை மீறி தாயும், மகனும் கதவை திறக்க ஓடினர். அவர்களை திருடன் தடுத்தான். இதில் மூன்று பேருக்கும் இடையே நடந்த சண்டையில் திருடன் பாத்திமாவின் கையில் கத்தியால் குத்தினான்.

மகனுடன் பாத்திமா

அப்படி இருந்தும் போராடி பாத்திமா கதவை திறந்து வெளியில் வந்து உதவி கேட்டு கத்தினார். இதனால் திருடன் பயத்தில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றான். அந்நேரம் பாத்திமாவின் மகன் திருடனின் முகத்தில் இருந்த முகமூடியை கழற்ற முயன்றான். இப்போராட்டத்தில் திருடன் சிறுவனின் தோல்பட்டையில் கத்தியால் உரசினான். அப்படி இருந்தும் 11 வயது சிறுவன் திருடனின் முகத்தில் இருந்த முகமூடியை அகற்றிவிட்டான். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூடுவதற்குள் திருடன் தப்பி ஓடிவிட்டான்.

இது குறித்து பாத்திமா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் தாக்கியதில் காயம் அடைந்த தாயும், மகனும் மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதோடு பாத்திமா தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வந்து திருடன் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளான் என்று இன்ஸ்பெக்டர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

3-வது முறையாக பெண் குழந்தை... மனைவியை உயிரோடு எரித்துக்கொலை செய்த கொடூர கணவன்

ஆண், பெண் பாலின பாகுபாடு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும், மனைவி தொடர்ச்சியாக பெண் குழந்தை பெற்றால் அவர் மீது கணவன் கோபப்படுவது, வீட்டை விட்டு துரத்துவது போன்ற சம்பவங்களும் இன்றுவரை நடந்... மேலும் பார்க்க

25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி... தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிரைவர்!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக லாரி வைத்துள்ள சுரேஷ், அவரே அந்த லாரியை ஓட்டியும் வந்துள்ளார். இவர் கடந்த 16-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் இருந்து... மேலும் பார்க்க

ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: டிப்ஸ் குறைவாக கொடுத்ததால் கத்தி குத்து, கொள்ளை... நடந்தது என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அங்கு தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: `முக்தி அடைந்து, இறைவனை நோக்கிச் செல்கிறோம்’ - ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சூரியலிங்கம் அருகே தனியாருக்குச் சொந்தமான `டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே’ என்ற பெயரில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது.இந்த பண்ணை வீட்டில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மகா கால... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போட்டோகிராபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் போட்டோகிராபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையத்தை அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி தெருவ... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்க பணம் இல்லை'' - ரயில் வீல்களுக்கிடையே அமர்ந்து 250 கி.மீ பயணம் செய்த இளைஞர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் அடியில் அமர்ந்தவாறு 250 கி.மீ பயணம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புனேவில் இருந்து டானாபூர் வரை, ரயில் எண் 12149 டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயில... மேலும் பார்க்க