பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Mollywood: ``2024 பெரும் நஷ்டம்; நடிகர்கள் நஷ்ட ஈடு வழங்குங்கள்" -மலையாள திரைப்பட தயாரிப்பு சங்கம்
இந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படங்களில் பிரமயுகம், மஞ்சுமல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம், வர்ஷங்ஙள்க்கு சேஷம், பிரேமலு, ஆட்டம், குருவாயூர் அம்பலநடையில், உள்ளொழுக்கு, வாழ, ஏ.ஆர்.எம், கிஷ்கிந்தா காண்டம். உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன.
இவற்றில் மஞ்சுமல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம், பிரேமலு, ஏ.ஆர்.எம் திரைப்படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்தாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வர்ஷங்ஙள்க்கு சேஷம், குருவாயூர் அம்பலநடையில், கிஷ்கிந்தா காண்டம் ரூ.50கோடி வரை வசூல் செய்தன. இதற்கிடையில் மோகன் லாலின் 'Manichitrathazhu', 'Devaduthan' படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றன.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளியான பல மலையாள திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனம் பெற்று பாராட்டுக்களைப் பெற்றன.
இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பு சங்கம், மலையாள திரையுலகிற்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து உதவ வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இதுகுறித்தான அறிவிப்பில், "2024ம் ஆண்டு வெளியான 199 திரைப்படங்களில் 26 திரைப்படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.
மொத்தமாக 199 திரைப்படங்களுக்கான ரூ.1000கோடி தயாரிப்பு செலவில், ரூ.300 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.700 கோடி நஷ்டமாகியிருக்கிறது. தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
நஷ்டமடைந்த திரைப்படங்களின் நடிகர்களும், உதவ முன்வரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களின் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும். இல்லையெனில் தயாரிப்பாளர்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும்" என்று தெரிவித்திருக்கிறது. இது மலையாள திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தி, பேசுபொருளாகியிருக்கிறது.