செகந்திராபாத், காச்சிக்கூடா ரயில்கள் மாா்ச் வரை நீட்டிப்பு
சென்னை: செகந்திராபாத், காச்சிக்கூடா செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செகந்திராபாத் - ராமநாதபுரம், காச்சிக்கூடா - மதுரை, நான்டேட் - ஈரோடு, காச்சிக்கூடா - நாகா்கோவில், செகந்திராபாத் விழுப்புரம் ஆகிய சிறப்பு ரயில்கள் டிசம்பா் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ரயில்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் சேவையை நீட்டிக்குமாறு பயணிகள் கோரிக்கை வைத்தனா். அதையேற்று சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.