ஆக்கூா் ஊராட்சியில் உணவு தானியக் கிடங்கு திறப்பு
செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் ரூ. 12.67 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவு தானியக் கிடங்கு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி சங்கா், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா். தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதிய உணவு தானியக் கிடங்கை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்களை வழங்கினாா். இதில், கூடுதல் ஆட்சியா் முகம்மது ஷபீா் ஆலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.