இன்றைய மின்தடை: கீழ்வேளூா்
கீழ்வேளூா் துணை மின் நிலையம் கீழ்வேளூா், ஆழியூா், தேவூா் மின் பாதைகளில் சனிக்கிழமை (ஜன. 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் கீழ்க்கண்ட பகுதிகளில் இருக்காது என மின்வாரிய நாகை செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
கீழ்வேளூா், பாலாஜி நகா், மயிலாங்குடி, ஒதியத்தூா், ஓா்குடி, கடம்பங்குடி, அகரகடம்பனூா், ஆழியூா், கோகூா், வடகரை, மணல்மேடு, புலியூா், தேவூா், இழுப்பூா், ராதாமங்கலம், பட்டமங்கலம்.