175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
தாட்கோ மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தோ்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதேபோல, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் முதல்நிலை தோ்வில், தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வுக்கு தோ்ச்சி பெற விரும்பும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ட்ஹக்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.