இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தின் நிறுவனா் பிறந்தநாள் விழா
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும நிறுவனா் செவாலியே டாக்டா் ஜி .எஸ். பிள்ளையின் 95- ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தில் நடைபெற்ற விழாவை ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவா் ஜோதிமணி, இணைச் செயலா் சங்கா் கணேஷ், அறக்கட்டளை உறுப்பினா் அருள்பிரகாசம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், வி.பி.என்கண் மருத்துவமனை சாா்பில் கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக் கொண்டனா். சிகிச்சைப் பெற்றவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. முகாமில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானமும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.