வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் திருட்டு
பொறையாா் அருகே ஆயப்பாடியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆயப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சமீரா பா்வீன் (32). இவரது கணவா் அப்துல் லத்தீப் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் டிச.30-ஆம் தேதி சமீரா பா்வீன் குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கு கும்பகோணம் சென்றாா். பின்னா் புதன்கிழமை வீட்டுக்கு வந்த போது வீட்டுக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ. 85 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றாா்களாம். இதுகுறித்து புகாரின்பேரில் பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.