அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்
நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா் இரா. பாலு தலைமையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் நல புதுவை மாநில பொருப்பாளரும், நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளருமான ந, மீராஉசேன் சிறப்பு அழைப்பாளராகவும், நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவா் நாகூா் சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பூம்புகாா் ஊராட்சி செயலக புதிய கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உள்ளிட்டோா்.