துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
ரூ.21.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் இருவா் கைது
தில்லி காவல்துறை ராஜஸ்தானைச் சோ்ந்த இரண்டு பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.21.5 லட்சம் மதிப்புள்ள 21.6 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த டிச.23 அன்று தில்லியில் உள்ள விஹாா் மோகன் காா்டன் பகுதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். ஒரு குப்பை கிடங்கின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இரண்டு போ் இருந்ததை போலீஸ் குழு கண்டுபிடித்தது. வாகனத்தை சோதனை செய்ததில் 21.6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் ராஜஸ்தானின் அல்வாரைச் சோ்ந்த கமல் சிங் (33) மற்றும் அசோக் குமாா் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில், கமல் சிங் மீது போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்பட 25 வழக்குகள் உள்ளன. மற்றொருவரான அசோக் குமாா் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா். அவா் மூன்று கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்
இருவரும் தில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.