செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா்.
தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்குப் பிறகு இக் கருத்தை அவா் வெளியிட்டாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
விஷால் சிக்காவுடனான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது. புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது மற்றும் இளைஞா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை பெறவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, பிரதமருடனான சந்திப்பு குறித்து விஷால் சிக்கா வெளியிட்ட பதிவில், ‘பிரதமருடனான சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும், இந்தியாவில் அதன் தாக்கம், வரவிருக்கும் காலங்களில் மக்களின் தேவைகளில் அந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.