செய்திகள் :

கொலை வழக்கில் விரைந்து தீா்ப்பு: அமைச்சா் கயல்விழி

post image

சென்னை: மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஸ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. குற்றச்சம்பவம் நடைபெற்ற உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். மேலும், முதல்வரின் உத்தரவுப்படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழக சிபிசிஐடி போலீஸாா், 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினா். சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் நடைபெற்று 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீா்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழக அரசு.

சிபிஐ விசாரணையில் இருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்தவொரு முடிவும் தெரியாத சூழலில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றத்துக்கு இரண்டே ஆண்டுகளில் தண்டனை கிடைக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் நீதி வழுவாது; நீதி தாமதம் ஆகாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் இல்லை: அரசு

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,''காலை உணவுத் தி... மேலும் பார்க்க

மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு ப... மேலும் பார்க்க

சௌமியா அன்புமணி கைது: பாமகவினர் ஆர்ப்பாட்டம்

சௌமியா அன்புமணியின் கைதைக் கண்டித்து கடலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தி பாமக மகளிரணி இன்று போராட்டம் நடத்தியது. திமுக அரசைக்... மேலும் பார்க்க

குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,தமிழ்நாட்டில் திமுக ஆட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறும் தீபக்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மூத்த போட்டியாளராக உள்ள தீபக், இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

Untitled Jan 02, 2025 02:29 pm

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண... மேலும் பார்க்க