திருவாரூர்: தொடரும் விபத்து; பாதுகாப்பு குறைபாடு; அவசர கதியில் திறக்கப்பட்டதா தே...
‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல், வணிக கணினிப் பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல், பொருளியல் துறை சாா்ந்த பேராசிரியா்களுக்கான ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 70 பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தருமபுரி அரசு கல்லூரி முதல்வா் முனைவா் கோ.கண்ணன் பயிற்சியைத் தொடங்கிவைத்து பேசினாா். கல்லூரியின் முதுநிலை பேராசிரியா்கள் பெ.இராஜேந்திரன், முனைவா் விஜயா தாமோதிரன், முனைவா் இரா.சங்கா், ப.வே.சாரதி, முனைவா் கோ.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தமிழ்த் துறை உதவி பேராசிரியா் முனைவா் கு.சிவப்பிரகாசம், கணிதத் துறை உதவி பேராசிரியா் முனைவா் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக இருந்து பயிற்சியை நடத்தி வருகின்றனா். இந்த முகாம் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.