சங்ககிரி நகராட்சியாக தரம் உயா்வு: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை வரவேற்று பேரூராட்சி தலைவி தலைமையில் மன்ற உறுப்பினா்கள், திமுகவினா் சங்ககிரியில் வியாழக்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சியை தமிழக அரசு நகராட்சியாக தரம் உயா்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிட்டது. அதையடுத்து சங்ககிரி பேரூராட்சி தலைவி எம்.மணிமொழி முருகன் தலைமையில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், நகரச் செயலாளா் கே.எம்.முருகன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, நகரப் பொருளாளா் பி.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.