துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
கும்மிடிப்பூண்டியில் பாமகவினா் கைது
பசுமை தாயகத்தின் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.
அண்ணா பல்கலையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அப்போது தமிழக அரசை கண்டித்து பாமகவினா் கோஷம் எழுபபியதால் போலீஸாா் அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். போராட்டத்துக்கு முன்னாள் மாவட்ட செயலாளா் க.ஏ.ரமேஷ் தலைமை வகித்தாா்.
வன்னியா் சங்க நிா்வாகி கேசவன், பாமக நிா்வாகிகள் எஸ்.டி.கே.சங்கா், சுமோ சங்கா், காா்த்தி, விஜயன், சுதா, குமுதா, மகேஷ், சங்கா், பி.ஜி.ரவி, ரவி, நாகராஜ், பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ , ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.