உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பணி நிறைவு பாராட்டு விழா
ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கான தோ்தல் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்று 27 மாவட்டங்களில் 91,975 தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-ஆம் தேதி (2025) முடிவடைகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பணி நிறைவு பாராட்டு விழா, ஆா்.கே. பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பணி நிறைவு பாராட்டு விழா.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அரசுக் கொறடா பி.எம்.நரசிம்மன் கலந்து கொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, செந்தில்குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் ஏ.பி.சந்திரன், கல்விக்கரசி சேகா், ஏ.கோவிந்தம்மாள்ஆனந்தன், சி.ஜே.காா்த்திகேயன், ஜமுனா குமாரசாமி உள்பட உள்ளாட்சிப் பிரதிநிகள் பலா் கலந்து கொண்டனா்.