துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
திருத்தணி திருப்படித் திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம்
திருத்தணி முருகன் கோயில் திருப்படித் திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கடந்த டிச. 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜன. 1-ஆம் தேதி (புதன்கிழமை) புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனா். மேலும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளியை காணிக்கையாக உண்டியலில் செலுத்தினா்.
இந்நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா் மு.நாகன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ. 64 லட்சத்து 72 ஆயிரத்து 765 ரூபாய் ரொக்கம், 47 கிராமம் தங்க நகை, 2975 கிராம் வெள்ளியை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 9 நாள்களில் கிடைத்த காணிக்கை ஆகும். எண்ணும் பணியின்போது, உதவி ஆணையா் விஜயகுமாா், கோயில் கண்காணிப்பாளா்கள் ஐயம்பிள்ளை, சித்ரா உள்பட பலா் இருந்தனா்.