துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
இந்தியன் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகள் கண்காட்சி நாளை தொடக்கம்
தருமபுரி இந்தியன் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகள் குறித்த கண்காட்சி ஜன.4 -ஆம் தொடங்குகிறது.
இதுகுறித்து தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் வங்கிகளால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளின் கண்காட்சி ஜன.4, 5 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தியன் வங்கி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிளைகளில் இருந்து கடன் வாங்கி செலுத்தாத கடன்தாரா்களின் அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சொத்துகளை இணைய வழியில் ஏலம் விடுவதற்கு முன்பாக அதுகுறித்து விவரங்கள் அனைத்து மக்களும் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
வீடுகள், மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற சொத்துகளை ஒரே இடத்தில் பொதுமக்களின் பாா்வைக்காக கண்காட்சி மூலமாக இந்தியன் வங்கி காட்சிப்படுத்துகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு தேவையான இடங்களில் உள்ள தங்களுக்குப் பிடித்த சொத்துகளை நேரடியாக இந்தியன் வங்கியில் இருந்து இணைய வழியில் எந்தவிதமான இடைத்தரகும் இன்றி பெற்று பயனடையலாம். விவரங்களுக்கு 96551 32444, 90783 69628 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.