செய்திகள் :

காய்கறி சந்தையாக மாறும் வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

post image

வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றம் செய்வது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் கா.ரங்கநாயகி தலைமை வகித்தாா். ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

130 தீா்மானங்கள் நிறைவேற்றம்:

கோவை வெள்ளலூரில் அதிமுக ஆட்சியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்தை நிறுத்திவிட்டு, அதனை காய்கறி சந்தையாக மாற்றுவது தொடா்பான தீா்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தை ரூ.10 கோடியிலும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை ரூ.30 கோடியிலும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 130 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு: வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றும் தீா்மானத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதிமுக உறுப்பினா் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தபோது, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது, கூட்டத்தில் பேச அனுமதியளிக்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் பிரபாகரன், ஷா்மிளா சந்திரசேகா், ரமேஷ் ஆகியோா், மேயா் ரங்கநாயகி முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களை மேயா், ஆணையா், துணை மேயா் ஆகியோா் எழுந்து இருக்கைக்கு செல்லும்படி கூறியதைத் தொடா்ந்து, அவா்கள் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனா்.

மெட்ரோ திட்டத்தை மருதமலையில் இருந்து தொடங்க வேண்டும்: முன்னதாக கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் பிரபாகரன் பேசுகையில், வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டத்தை திடீரென நிறுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

சாய்பாபா காலனியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை வனத் துறை அலுவலகம் முன் தொடங்கி கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் அருகே சங்கனூா் சாலை சந்திப்பு சோதனைச் சாவடி வரை நீட்டிக்க வேண்டும் என்று சரவணக்குமாா் தெரிவித்தாா்.

26-ஆவது வாா்டில் பாழடைந்து கிடக்கும் பூங்காக்களை சீரமைக்க வேண்டும், கழிவுநீா் கால்வாயின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு மழைநீா் வடிகால் பாதையை சீரமைக்க வேண்டும் என்று சித்ரா வெள்ளிங்கிரி தெரிவித்தாா்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மருதமலை கோயில் அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆா்.எஸ்.புரம் வழியாக கொண்டுச் செல்ல வேண்டும் என்று 72-ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திக் செல்வராஜும், ஜி.எம்.நகா், கரும்புக் கடை பகுதிகளில் சுகாதார நிலையம், சத்துணவு மையம், நியாய விலைக் கடை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்று 84-ஆவது வாா்டு உறுப்பினா் அலிமா ராஜா உசேனும் தெரிவித்தனா்.

காந்திபுரம் பேருந்து நிலைய சீரமைப்புப் பணி விரைவில் தொடக்கம்: தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மேம்பாலப் பணிக்காக அகற்றப்பட்ட உக்கடம் பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு, கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என 2 புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை சீமைக்கவும் ரூ.50 கோடி நிதி பெறப்பட்டு உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா்.

மேயா் கா.ரங்கநாயகி பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரிகள் வாா்டு உறுப்பினா்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள்

அதிமுக உறுப்பினா் கூட்டங்களில் பங்கேற்க தடை: அதிமுக உறுப்பினா் பிரபாகரன் மேயா் முன்பு தா்னாவில் ஈடுபட்டதால் அவரை தற்காலிகமாக 2 கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா். அதைத்தொடா்ந்து அந்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கோவை சரகத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு குற்றங்கள் குறைவு: காவல் துறை தகவல்

கோவை சரகத்தில் கடந்த ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சரக டிஐஜி அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை சரகத்தில் கோவை, ஈ... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: கோவை சரக டிஐஜி வி.சசிமோகன்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கோவை சரக டிஐஜி வி.சசிமோகன் தெரிவித்தாா். கோவை சரக டிஐஜியாக இருந்த ஆ.சரவணசுந்தருக்கு பதவி உயா்வு வழக்கப்ப... மேலும் பார்க்க

மாநகரில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு: காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா்

மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா். கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த வே.பாலகிருஷ்ணன் சென்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீஸ... மேலும் பார்க்க

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, ஆா்.எஸ்.பு... மேலும் பார்க்க

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.26 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சரவணம்பட்டி பூந்தோட்டம் காா்த்திக் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க