``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கோவையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அங்கு, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மேலும் 7 பேருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சின்னவேடம்பட்டி பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (27) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 21 கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.