``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. தேவாலயங்கலில் சிறப்பு பிராா்த்தனைகளும், ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடினா்.
இந்நிலையில், திருச்சி சாலையில் ஹைவேஸ் காலனி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அவா்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனா். ஆனால், தொடா்ந்து இளைஞா்கள் மோதலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 10 போ் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.