துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் தொடக்கம்
ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தாா். விழாவில் பேசிய அவா், விரைவில் சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அரசுப்பாளையம் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தாா்.
இதில், ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.